வடக்கில் சுகாதார அமைச்சின் புதிய நடைமுறைகள் : சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி
வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத்துறையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய (13.11.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்றைய தினம் (12) தாதிய உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் வடக்கு மாகாணத்திலுள்ள பொது மக்கள் மிகப்பெரிய பிரச்சினைக்கு உள்ளாகுவார்கள்.
அதைத்தவிர வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத்துறையில் சில விடயங்களை செய்திருக்கின்றார்கள். முக்கியமாக சகல உத்தியோகத்தர்களையும் ஒரு புத்தகத்தில் கையொப்பமிடும் ஒரு முடிவெடுத்துள்ளார்கள்.
தயவுசெய்து வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அந்த உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகளை அழைத்துவந்து சுகாதார அமைச்சில் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்க்கவும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |