நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடுவதாக முறைப்பாடு-கவனம் செலுத்தப்படுமா? மக்கள் ஆதங்கம்
நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுயாதீனமாக நடமாடுவதாக பொது மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் தொற்றாளர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடுவதும் தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்காக பல மைல் தூரங்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பயணிக்கின்றனர். மேலும் இவர்கள் தங்களுடைய பி.சி.ஆர் பரிசோதனையை நிறைவு செய்து கொண்ட பின்பு தங்களுடைய தேவைகளுக்காக நகரத்தை நோக்கி பயணிக்கின்றனர்.
இதன் காரணமாக இவர்கள் மூலமாக தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் தனியான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு பரிசோதனை முடிவடைந்தவுடன் அவர்களுடைய வீடுகளுக்கே அனுப்பி வைக்க முடியுமாக இருந்தால் அதுவே சிறந்த ஒரு வழியாகும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை முறையாக செயற்படுத்தாவிட்டால் மிக குறுகிய காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனம் காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக சுகாதார பிரிவினர் அதிக கவனம் செலுத்த வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.