நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் கனமழை: பல இடங்களில் நிலச்சரிவு அபாயம்!

Nuwara Eliya Landslide
By Pavi Aug 04, 2026 06:00 AM GMT
Report

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரமாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியான மழையால் மலையகத்தின் பிரதான வீதிகள் பல மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்பளையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 500 குடும்பங்கள் இடம்பெயர்வு!

கம்பளையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 500 குடும்பங்கள் இடம்பெயர்வு!

மீண்டும் கனமழை

குறிப்பாக நோர்வூட், ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் கனமழை: பல இடங்களில் நிலச்சரிவு அபாயம்! | Nuwara Eliya Districtrisk Landslides Several Areas

மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்படி, அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதியின் 32 கி.மீ மற்றும் 66 கி.மீ பகுதிகள், நாவலப்பிட்டி - கினிகத்தேன வீதி, தண்டகல - பலம்பிட்டிய - தொலஸ்பாகே வீதி உட்பட 8 பிரதான வீதிகள் நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து விழுந்தமையால் முற்றாக மூடப்பட்டுள்ளன.

இதனால் நுவரெலியா மாவட்டத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவி எண்

கனமழை காரணமாக காசல்ரீ, மௌஸ்ஸாகலை, கொத்மலை ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் கனமழை: பல இடங்களில் நிலச்சரிவு அபாயம்! | Nuwara Eliya Districtrisk Landslides Several Areas

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கீழ்ப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவிக்கையில், "அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 24 மணிநேரத்திற்கும் நுவரெலியா மாவட்டத்தில் 100 மி.மீக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறியுள்ளது.

இதனால் நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிகளுக்கு 117 என்ற அனர்த்த முகாமைத்துவ இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026