விவசாயிகள் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்டநிலை
nuwara-eliya
farmer
vegetables
economic-center-closed
By Jaso
விவசாய நிலங்களுக்கு தேவையான உரம் மற்றும் கிருமி நாசினி கிடைக்காததை அடுத்து தமது மரக்கறி வகைகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் வழங்க மறுத்துள்ளனர்.
இதனால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளின் இந்த அதிரடி முடிவால் மரக்கறி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில மரக்கறிகள் கிலோ 600 ரூபாவை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மெனிங் சந்தைக்கு இன்று மிக குறைந்தளவான மரக்கறிகளே கொண்டு வரப்பட்டதாக அனைத்து இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருண ஷாந்த ஹெட்டியாராட்ச்சி (Aruna Shantha Hettiarachchi)தெரிவித்துள்ளார்.