நுவரெலியா கோல்ஃப் மைதான விவகாரம் : ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணை
நுவரெலியா (Nuwara Eliya) கோல்ஃப் மைதானத்தில் உள்ள 50க்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த மரங்களை வெட்டுவதற்கு அந்த மைதானத்தின் நிர்வாக சபை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
300 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட குறித்த கோல்ஃப் மைதானத்தில் 100 வருடங்களுக்கும் மேலான சைப்ரஸ் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பல மரங்கள் உள்ளன.
பிரதேச செயலாளர்
அத்துடன், குறித்த மரங்கள் தரைத்தோற்ற அம்சங்களுக்கேற்ப நுவரெலியாவில் மாத்திரம், வளரக்கூடியவையாகும். இந்தநிலையில், அந்த மரங்களின் கீழ்ப் பகுதியில் உள்ள பட்டைகள் அகற்றப்பட்டு கருப்பு நிறத்திலான எண்ணெய் பூசப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேநேரம், கோல்ஃப் மைதானத்தில் உள்ள மரங்களை அகற்றுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமோ அல்லது தங்களிடமோ எவ்வித அனுமதியும் பெறவில்லை என நுவரெலியா பிரதேச செயலாளர் பிரதீப் தலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மரங்களை வெட்டவோ அழிக்கவோ வேண்டாம் என நுவரெலியா கோல்ஃப் மைதானத்தின் நிர்வாக சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |