நுவரெலியாவில் இளம் யுவதி மாயம்
girl
missing
nuwara eliya
By Vanan
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தோட்டத்தில் 25 வயதுடைய திருமணம் முடிக்காத யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஜெயபாலன் நிலானி (வயது 25) என்ற யுவதியே, விறகு தேடச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில், யுவதியின் தந்தை நேற்று (05) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நுவரெலியா பொலிஸார், இன்று (06) காலை முதல் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.