மைதானத்தில் சலசலப்பு - பந்தால் நடுவரை தாக்கிய பாகிஸ்தான் வீரர்(காணொளி)
நியூசிலாந்து எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் எறிந்த பந்து நடுவரை தாக்கியதால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.
சீருடையை கீழே எறிந்தார்

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம், தன்னிடம் வந்த பந்தை எடுத்து ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார்.
ஆனால் அந்த பந்து நேரடியாக நடுவரை தாக்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் கோபத்தில் கையில் வைத்திருந்த வீரரின் சீருடையை கீழே எறிந்தார். உடனே அவரது அருகில் வந்த பாகிஸ்தான் வீரர்கள் நடுவரை சமாதானப்படுத்தினர்.
வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆறுதல் கூறிய நிலையில் இந்த நிகழ்வினால் மைதானத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
Straight to Aleem Dar's ankle. pic.twitter.com/Vht8dvF5mA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 11, 2023