சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்
புதிய இணைப்பு
2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.
வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 25 பேர் ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்று
பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பாடசாலையின் பெறுபேறுகளில் மாணவர்கள் உயர்வை வெளிப்படுத்தி வரும்
நிலையில் தற்போதும் அதிகளமான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தியை
பெற்றுள்ளதோடு 16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தியையும் பெற்றுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த பெறுபேறு
அதிகஸ்ட பாடசாலையான வவுனியா - சின்னடம்பன் வித்தியாலய மாணவர்கள் இம்முறை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன், இந்த பாடசாலையின் ஏனைய மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நவரத்தினம் அகலியா - 3A, 3B, 2C, S பெறுபேற்றையும், விவேகானந்தராசா பாவரசன் - A, 3B, 3C, 2S பெறுபேற்றினையும், சிவகுமார் சாருஜன் - A, 3B, 4C, S பெறுபேற்றினையும், வசந்தகுமார் கிந்துஷா - B, 4C, 4S பெறுபேற்றையும், திருச்செல்வம் நிலாயினி - 3B, 2C, 3S பெறுபேற்றையும் அன்ரன் செல்வகுமார் சன்சிகா - 2B, 3C, 3S பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய (Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வரலாற்றில் முதல் தடவையாக இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சாதனை படைத்த மாணவர்கள்
இந்தப் பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28 மாணவர்கள் விசேட சித்திகளையும் 18 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன் இம்முறை அதிகளவான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |