நாடாளுமன்றத் தேர்தலுக்காக 08 நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு
நாடாளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக எட்டு நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் (Russia) இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க
(R.M.A.L. Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் நடவடிக்கை
இதற்கு மேலதிகமாக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை அவதானிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பார்வையாளர்களும் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொகுதி
அத்தோடு, நாட்டிலுள்ள குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மாத்தளை (Matala), காலி (Galle), மாத்தறை (Matara), குருநாகல் (Kurunegala) மற்றும் பதுளை (Badulla) ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |