வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரின் கருத்தையே நிராகரித்த சுகாதார அமைச்சர்
கொரோனா சமுக மட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக தான் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நிராகரித்ததுடன் அவ்வாறு எதுவும் இல்லையெனவும் கூறினார்.
இவ்வாறு வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள செலவிடும் தொகையை சுகாதார கல்விக்கு செலவழித்து, நாடுபூராகவும் சுகாதார வழிகாட்டல்களை மக்கள் மத்தியில் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சோசலிச மக்கள் கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக பரவிவருகின்றது. ஆனால் வைரஸ் தொடர்பான நிபுணர் என்றவகையில் அரசாங்கம் இதுதொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் என்னை அழைக்கவில்லை.
சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் நானும் ஒரு அங்கத்தவராக இருக்கின்றேன். கொத்தணி முறையில் இருந்து சமூகமட்டத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.
அதனை கட்டுப்படுத்த முறையான சுகாதார பழக்க வழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும்.
கொவிட்டை கட்டுப்படுத்த இன்னும் 5 வருடங்கள்வரை செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.