யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்ட நிலை ( படங்கள்)
jaffna
slfp
Office
By Vanan
யாழ். பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் குறித்த அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அவ் அலுவலகம் மேற் கூரையின்றிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தினுள் கதிரை மேசைகள் உள்ளிட்ட அலுவலகப் பொருட்கள் சிலவும் காணப்பட்டன.
அலுவலகத்தின் கதவு பழுதடைந்த நிலையில், திறந்தவாறே காணப்படுவதுடன், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் உருவப் படம் தாங்கிய போஸ்டர் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி