உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி
Petrol diesel price
World
By Pavi
உலக சந்தையில் பிரென்ட் மற்றும் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் 110 அமெரிக்க டொலர்களை அண்மித்திருந்த ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை, தற்போது 100 டொலர் மட்டத்திற்குக் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, தற்போது அதன் விலை 99 டொலருக்கும் குறைவான மட்டத்தில் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க WTI கச்சா எண்ணெய்
இதேவேளை, ஒரு வாரத்திற்கு முன்னர் 105 டொலர்களைத் தாண்டியிருந்த ஒரு பீப்பாய் அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, தற்போது 90 டொலர் மட்டத்திற்குக் கீழ் பதிவாகியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |