இன்று நள்ளிரவுடன் தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கோரிக்கை
நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
எவரேனும் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இந்தச் சட்டங்களை மீறினால், அது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |