யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று (27) அதிகாலை முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (26) காலை 7.45 மணியளவில் தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போது பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியுள்ளது.
79 வயதான முதியவர்

அதனையடுத்து, அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தவசிக்குளம், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் ஜேசுரட்ணம் (வயது 79) என்கிற 4 பிள்ளைகளின் தந்தையே ஆவார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 12 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்