சுட்டெரிக்கும் வெயில் : முதியவர் குளுகுளு பயணம்
Sunrise
Weather
By Jaso
தற்போது சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகளை நாடுகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனை தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் பிரம்மநாயகம் (வயது 78), கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக தனது காரின் மேல் பகுதியில் தென்னந்தட்டிகளை வைத்து கட்டி வித்தியாசமான முறையில் பயணிக்கிறார்.
மற்றவர்களுக்கு வேடிக்கை எனக்கு குளுமை
இதுகுறித்து அவர் கூறுகையில்,
''காரின் மீது தென்னந்தட்டிகளை வைத்து பயணிப்பது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் எனக்கு குளுமையாக உள்ளது.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக கோடையில் எனது காரில் தென்னந்தட்டிகளை வைத்து கட்டி இயற்கையான குளுகுளு காற்றுடன் இனிமையான பயணம் மேற்கொள்கிறேன்'' என்றார்.
மரண அறிவித்தல்