முறிந்தது கனடா - அமெரிக்கா உறவு!!
கனடாவிற்கும் (Canada) அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு (US) வாகன இறக்குமதிக்கு ட்ரம்ப திட்டமிட்டுள்ள 25 சதவீத வரி அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது, மேலும் இது 500,000 வேலைகளை ஆதரிக்கும் கனேடிய வாகனத் தொழிலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்த மீறல்
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு பிறகு, ஏப்ரல் 28 அன்று கனடாவின் தேர்தலுக்கு முன்னதாக கார்னி தனது பிரச்சாரத்தை இடைநிறுத்தி, அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் தந்திரோபாயங்களில் பணிபுரியும் அமைச்சரவை உறுப்பினர்களின் கூட்டத்திற்காக ஒட்டாவாவுக்குத் திரும்பினார்.
அதன்போது, ட்ரம்பின் வாகனங்கள் மீதான வரி நியாமற்றது என்றும் அவை நாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதாகவும் பிரதமர் கார்னி சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு, ட்ரம்ப் அமெரிக்காவுடனான உறவுகளை நிரந்தரமாக மாற்றியமைத்துவிட்டார் என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்தாலும், பின்வாங்க முடியாது என்றும் அவர் கனடியர்களை எச்சரித்துள்ளார்.
கனடாவின் பதிலடி
இதன்படி, "தங்கள் பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்காவுடன் தாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முறிந்து விட்டதாக கார்னி தொடர்ந்தும் கூறியுள்ளார்.
இதேவேளை, வாகன வரிகளுக்கு கனடா பதிலடி கொடுக்கும் என தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, இம்முறை போராடுவது, பாதுகாப்பது, கட்டியெழுப்புவது என்பவையே பதிலடியாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் அதிகபட்ச தாக்கத்தையும் கனடாவில் குறைந்தபட்ச தாக்கங்களையும் ஏற்படுத்தும் எங்கள் சொந்த பழிவாங்கும் வர்த்தக நடவடிக்கைகளுடன் அமெரிக்க வரிகளை எதிர்த்துப் போராடுவதாக பிரதமர் கார்னி உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
