இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள உள்நாட்டு விமான சேவைகள்
இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு (Jaffna International Airport) நேற்று (30) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
அத்துடன் இதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக உள்நாட்டு விமானங்களை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அதற்கேற்ப தேவையான சட்டங்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்படி நடந்தால், இலங்கையில் உள்ள தனியார் விமான உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இங்கு விமானங்களை கொண்டு வர முடியும் என்று நம்புவதாகவும் அவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் போது இலாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
