இவரை தெரியுமா! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
கொஹுவல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கொஹுவல காவல் பிரிவுக்குட்பட்ட கொடியாவட்டை பகுதியில் டிசம்பர் 30, 2025 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
வெளியிடப்பட்ட ஓவியம்
குறித்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விசாரணையின் ஒரு பகுதியாக, ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், ஓவியர் ஒருவரின் உதவியுடன் முக ஓவியத்தை தயாரித்துள்ளனர்.
அதன்படி, சந்தேக நபரை அடையாளம் காண உதவுவதற்காக இந்த ஓவியம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு
சந்தேக நபருடன் தொடர்புடைய தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் கொஹுவல காவல் நிலையம் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல காவல் நிலையத்தை 071-8591669 என்ற எண்ணுக்கு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவை 071-4146727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விசாரணையை விரைவுபடுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 13 மணி நேரம் முன்