பழங்குடியினத் தலைவரிடம் கருத்துக் கேட்டறிந்த ஒரே நாடு ஒரே சட்டம்! கூறிய விடயம் என்ன??

Badulla SriLanka Indigenous people one law One country Uruvarike vannila atto
By Chanakyan Jan 09, 2022 08:44 AM GMT
Report

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான அரச தலைவர் செயலணிக்கு, பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ கருத்துத் தெரிவித்தார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான அரச தலைவர் செயலணி, தற்போது ஊவா மாகாண மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறது.

இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 6ஆம் திகதியன்று மஹியங்கனை பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த செயலணியினர், அதன் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவிடம் இருந்து, பழங்குடியின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.

“ஒரே நாடு ஒரே சட்டத்தை” ஸ்தாபிப்பதற்கு அரச தலைவருக்கு பலம் இருக்கின்றதெனத் தாம் நம்புவதாகக் கூறிய வன்னில அத்தோ, எந்தத் தடைகள் ஏற்படினும், அவற்றைக் கடந்து இப்பணியில் வெற்றிபெற அரச தலைவர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

ஜனவரி 8ஆம் திகதியன்று பதுளை மாவட்டச் செயலகத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அரச தலைவர் செயலணி முன்னிலையில் கருத்துத் தெரிவித்த ஹஷீனா, தான் இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் பதுளை காதியார், எந்தவித அறிவிப்புமின்றி தனது கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.

இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேச ஆளில்லை என்றும் தம்மீது அக்கறை காட்ட எவரும் இல்லாததால், “ஒரே நாடு ஒரே சட்டம்” திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திரப் போரில் முன்னணி வகித்த பிரித்தானிய ஆட்சியாளர்களால் காணி உரிமை பறிக்கப்பட்ட பல தலைமுறைகளின் பிரதிநிதிகள், நாட்டின் காணிச் சட்டம் இன்னமும் நியாயமாக நடைமுறைப்படவில்லை என்றும் வெளிநாட்டுப் படையெடுப்புகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முன்வந்த தமது குடும்பங்கள் மற்றும் அதன் விளைவாகச் சொத்துக்களையும் உயிர்களையும் இழந்த தமது குடும்பங்களுக்கு, சுதந்திரத்துக்குப் பின்னராக இதுவரை காலமும், எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை என்று அரச தலைவர் செயலணியின் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.

நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிப்பதில்லை. இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கவனஞ்செலுத்த வேண்டும்.

அதேபோன்று, தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகக் காணிப் பிரச்சினை காணப்படுவதாக, பல தோட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் செயலணியிடம் தெரிவித்தனர்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான அரச தலைவர் செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித வண. கலகொடஅத்தே ஞானசார தேரர், உறுப்பினர்களான பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்ஹ, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பானி வேவல, ஆகியோருடன் அரச தலைவர் செயலணியின் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி