மேலுமொருவரை காவு வாங்கியது எரிபொருள் வரிசை..!
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Fuel Crisis
By Kanna
கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்னறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கிண்ணியா - முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இதுவரை நாட்டில் 15 பேர் எரிபொருள் வரிசையில் காத்திருந்த வேளை உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி