ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டியெழுப்ப ஒரு மணி நேர சுத்தம் செய்யும் திட்டம்
இந்தியாவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அதற்கு முன்னதாக தூய்மையை மையப்படுத்தி "ஆரோக்கியமான இந்தியா" எனும் தொனிப்பொருளில் இந்தியா பிரச்சாரத்தை நிகழ்த்தியுள்ளது.
இதற்காக நேற்றைய தினம் (01) இந்தியா முழுவதும் ஒரு மணி நேர சுத்தம் செய்யும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இணைந்து செயற்படுகிறோம்
இதனை பிரதமர் நரேந்திர மோடி முன்னணியில் இருந்து தலைமை தாங்கியுள்ளார், இது குறித்து தனது உத்தியோகபூர்வ X (Twitter) பக்கத்தில் காணொளி ஒன்றையும் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
"ஆரோக்கியமான இந்தியாவை கட்டியெழுப்ப தூய்மையுடன் உடலாரோக்கியத்துடனும் இணைந்து செயற்படுகிறோம்" என குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Today, as the nation focuses on Swachhata, Ankit Baiyanpuriya and I did the same! Beyond just cleanliness, we blended fitness and well-being also into the mix. It is all about that Swachh and Swasth Bharat vibe! @baiyanpuria pic.twitter.com/gwn1SgdR2C
— Narendra Modi (@narendramodi) October 1, 2023
இதேவேளை , பிரதமர் மோடி மாத்திரமல்லாது, அமைச்சர்கள் உட்பட பல பா.ஜ.க தலைவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.