தமிழர் பகுதியில் கனரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
கிளிநொச்சியில் (Kilinochchi) மணல் ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த கனரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (16) பிற்பகல் குடமுருட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியிலிருந்து அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றியவாறு பூநகரி நோக்கி கனரக வாகனம் பயணிப்பது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
இந்த நிலையில், குறித்த கனரக வாகனத்தை மறித்து சோதனையிட காவல்துறையினர் முயற்சித்தனர்.

இதனையடுத்து கனரக வாகனத்தை நிறுத்தாமல் பயணித்த நிலையில் குடமுருட்டி பகுதியில் வைத்து காவல்துறையினர் கனரக வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், காயமடைந்த நபருக்கு கால்ப் பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |