போதை மாத்திரைகளுடன் யாழில் ஒருவர் கைது
jaffna
arrested
drugs
By Vanan
யாழ்ப்பாணம் - ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார், 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரைகளை ( 9 ஆயிரத்து 60 மாத்திரைகள்) சந்தேக நபரிடம் கைப்பற்றட்டுள்ளதுடன், ஏழாலையைச் சேர்ந்த 38 வயது நபரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.