மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் புனாணை 126 மைல் கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்
ரிதிதென்னையைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் பொலனறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் புனாணை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

வாகன சாரதி கைது
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதியை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்