கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்: தொடரும் விசாரணைகள்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கட்டுவன - அமுதமன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவருக்கும் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
சம்பவத்தையடுத்து சந்தேகநபர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கட்டுவன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்