யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்து : ஸ்தலத்திலேயே பூசகர் உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லைப் பகுதியில் இன்று (28) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பூசகர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வீதிக்கு ஏறிய இளைஞனுடன் மோதுண்டு வீதியில் விழுந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை பின்னால் வந்த வாகனம் பூசகரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லியடி காவல்துறையினர் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |