நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகளால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (13) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 17 பேர் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |