பலாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
இரத்தினபுரி - பலாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிரிமினகோட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் பேருந்து ஒன்று பின்னோக்கிச் சென்றபோது அதனுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு பேருந்துக்கு வழிவிடுவதற்காக இந்தத் தனியார் பஸ் பின்னோக்கி நகர்த்தப்பட்ட போதே இந்தத் விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் பலாங்கொடை, மஹவலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி உடனடியாகப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |