நாடு கடந்து வந்து இணைய வழியில் நிதி மோசடி:32 சீனப் பிரஜைகள் கைது
Sri Lanka
China
Arrest
By Sindu
பாணந்துறை, நல்லூருவ பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாகப் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 32 சீனப் பிரஜைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 23 கணினிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: தெனியாய பகுதியில் நீரில் மூழ்கி மாயமான நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
விசாரணைகள் முன்னெடுப்பு
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் ஆணையின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

குறித்த நபர்கள் எத்தகைய நிதி மோசடிகளில் ஈடுபட்டனர் மற்றும் அவர்கள் இலங்கைக்கு வந்த நோக்கம் என்ன என்பது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி