பதவி விலகத் தயார் : ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு
நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த தேர்தலுக்குச் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நேற்று (07) இடம்பெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இந்த மக்கள் இருக்கும் வரையில் தேசிய மக்கள் சக்திக்கு அடக்குமுறைச் சட்டங்கள் தேவையில்லை. மக்கள் இல்லையென்றால், அடக்குமுறைகளைப் பயன்படுத்தி நாங்கள் ஆட்சியில் நீடிக்க மாட்டோம்.
தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம்
அடுத்த தேர்தலுக்குச் செல்லுமாறு மக்கள் கூறினால், நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஆட்சியில் நீடிக்கத் தயாராக உள்ள சக்தியல்ல.

நவம்பர் 12 அன்று சமர்ப்பிக்கப்படவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி (PAYE tax) தொடர்பாக மேலதிக நிவாரணங்களை வழங்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |