கென்யாவில் கொலை செய்ப்பட்ட 190 குழந்தைகள்: மதத்தலைவர் ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறை
கென்யாவில் 190 குழந்தைகள் ஒரு வயது வந்தவரைக் கொலை செய்ததற்காக, அந்நாட்டின் மதத்தலைவர் ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் உலகின் மிக மோசமான மதக்குழுப் பேரழிவுகளில் ஒன்று என கருதப்படும் இந்த சம்பவம் குறித்து அந்நாட்டின் கடலோர நகரமான மொம்பாசாவில் உள்ள நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த மத தலைவருக்கு எதிரான வழக்கில் பட்டினியால் கொலை செய்த குற்றத்திற்காக 100 ஆண்டுகளும், நேரடிக் கொலைக் குற்றத்திற்காக 100 ஆண்டுகளும் என இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட உடல்கள்
Paul Mackenzie மற்றும் News International Church ஆகியவை , உலகம் அழியும் முன் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக, தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பட்டினி கிடந்து சாகும்படி அதன் உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்ட ஒரு பிரிவை நடத்தி வந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரது கட்டளைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, அவரது ஆாரவாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியும் அடித்தும் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த நடவடிக்கையில் மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கடுமையாகச் சிதைந்திருந்த நிலையில், 26 உடல்களை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |