எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் புதிய அறிவித்தல்
மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு
மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை பெற பதிவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதற்காக போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சுகளால் புதிய இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் வாராந்தம் 10 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை பெறமுடியும்.

பதிவுகளுக்கு - https://www.wptaxi.lk
எரிபொருள் விலை திருத்தம்
இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் அல்லது நாளைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.