நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஆதரிக்கும் மொட்டு கட்சி...!
உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஆதரிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொது மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களை நிர்வகிக்க குறித்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அத்தியவசியமானது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விபரங்கள்
இலங்கையில் உள்ள நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
வீண் அச்சம்
அத்துடன், ஒரு தனி நபரால் வெளியிடப்படும் கருத்துக்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் செய்திகள் தொடர்பில் குறித்த நபரால் பொறுப்பேற்க முடியுமானால், இந்த சட்டத்தின் நடைமுறை தொடர்பில் அச்சமடைய தேவையில்வை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்க்கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரவளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |