கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம்! 30 ஆண்டுகளின் பின் அடித்த அதிர்ஷ்டம்
Canada
World
By Beulah
கனடாவில் 80 வயதான முதியவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றுள்ளார்.
80 வயதான எலன் ஸ்லோட் என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
லொட்டோ கோல்ட் போல் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
நாட்டின் 70 வீதமான மக்கள் வாழ்வதற்கான பெரும் போராட்டத்தை எதிர்க்கொள்கின்றனர் : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
வாரத்திற்கு இரண்டு தடவை
ஒன்றாரியோவின் ஹமில்டன் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எலன் ஸ்லோட் தெரிவிக்கையில்,
“கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருகிறேன். வாரத்திற்கு இரண்டு தடவை லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்பதனை வாடிக்கையாக கொண்டுள்ளேன்.
இந்நிலையில், புதிய கார் ஒன்றை கொள்வனவு செய்ய உள்ளதோடு, குடும்பத்துடன் பரிசுப் பணத்தை பகிர்ந்து கொள்ள உள்ளேன்.” என்றார்.
அத்துடன், இப்பரிசுத்தொகையில் நன்கொடை வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |