நுகேகொடையில் எதிர்கட்சிகளின் மாபெரும் பேரணி: அகற்றப்பட்ட ஒலிப்பெருக்கிகள்
நுகேகொடை போராட்டத்திற்காக பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் காவல்துறையினர் அகற்றப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகளினால் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று (21) பிற்பகல் இரண்டு மணிக்கு மிரிஹான காவல் பிரிவின் நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஒலிபெருக்கி
குறித்த பேரணி ஆரம்பிக்க சில மணிநேரமே எஞ்சியுள்ள நிலையில், காவல்துறையினர் அங்கிருந்த ஒலிபெருக்கிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, காலையில் இருந்து நுகேகொடை பகுதியில் வீதியோரங்களில் புல் கட்டுக்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நடைபெறவுள்ள போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவ்வாறு வீதியோரங்களில் புல் கட்டுக்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்