பாதுகாப்பு கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிரணி போராட்டம்! சந்தித்து கலந்துரையாடிய சிறிலங்கா பிரதமர்
பாதுகாப்புக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், போராட்டத்தை ஏற்பாடு செய்கின்ற போது அதிகமான உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.
கடந்த காலங்களில் அரசியல் போட்டியில் என்னுடன் இணைந்து பல்வேறு சட்டத்தரணிகளும் பங்குபற்றினர் எனவும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹேஷ விதாணகே, மயந்த திஸாநாயக்க மற்றும் சுஜித் பெரேரா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இவ்வாறு சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.
[]