ஒப்பரேஷன் அஜய் திட்டம்: இந்தியர்களை அழைத்து வர தயாராகும் அடுத்த விமானம்
இந்தியாவின் ஒப்பரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் அடுத்த விமானம் மீட்பு பணிக்காக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலினால்
பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில் அங்குள்ள தமது நாடு மக்களை மீட்கும் பணிகளை ஒவ்வொரு நாடும் முன்னெடுத்துள்ளது.
அதில் முதற்கட்டமாக இந்தியா ''ஒப்பரேஷன் அஜய்'' என்ற திட்டத்தை அறிவித்தது.
5 சிறப்பு விமானங்கள்
இதனை தொடர்ந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களின் மூலம் 1200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீதமிருக்கும் இந்தியர்களையும் மீட்கும் நோக்கத்தில் அடுத்த விமானம், ஒக்டோபர் 22 இஸ்ரேலில் உள்ள டெல் அவ்விலிருந்து டெல்லிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The next flight of #OperationAjay from TLV to Delhi is on 22 Oct. Embassy has sent confirmation emails to those who have already filled the travel form. Other Indian nationals wishing to avail of this flight are urgently requested to fill the travel form. https://t.co/2KD5xnNSt8
— India in Israel (@indemtel) October 20, 2023
மேலும் அங்குள்ள இந்தியர்கள் பயணப் படிவத்தை ஏற்கனவே பூர்த்தி செய்த நிலையில், தூதரகம் உறுதிப்படுத்துவதற்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது என்றும் இந்த விமானத்தை பயன்படுத்த விரும்பும் பிற இந்திய மக்கள் விரைவாக பயணப் படிவத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
