பிரதமர் மஹிந்த விடுத்துள்ள உத்தரவு
அபிவிருத்தி திட்டங்கள், அவற்றை செயற்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்பார்க்கும் திட்டங்களுடன் அமைச்சரவை அமைச்சின் செயலாளருடன் இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து கலந்துரையாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடும் விடயங்களை காலாண்டுக்கு ஒருமுறை மீளாய்வு செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான செயற்திறன் மிக்க வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் நான்கு திட்டங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூன்று அரச நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டின் திட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் கூட்டம் அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இதன் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.