நாடு முழுவதும் உள்ள விகாரைகள் தொடர்பில் மகிந்த பிறப்பித்த உத்தரவு
நாடு முழுவதும் உள்ள அனைத்து விகாரைகளினதும் கழிவறை வசதிகளை ஆராய்ந்து, அந்த வசதிகள் முறையாக இல்லாத விகாரைகளுக்கு, அவ் வசதிகளை முறைப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
'புதுபுத் மாபிய ஹரசர' மற்றும் 'புதுபுத் ஹரசர பூஜா' சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்தார்.
2022 புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்த பிரதமர் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன மற்றும் ஏனைய பணியாளர்களால் வரவேற்கப்பட்டதுடன், பிரித் பாராயண நிகழ்வும் சர்வமத ஆசீர்வாத பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 'புதுபுத் மாபிய ஹரசர' மற்றும் 'புதுபுத் ஹரசர பூஜா' சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.