எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கூறியது போல் இல்லாமல் ஜனாதிபதி என்ற நிலைப்பாட்டிலேயே எரிபொருள் விலை திருத்தத்தை அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) செய்ததாக இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரொலியம் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் இன்று (1) பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் டி. ஜே. ராஜகருணா அதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எரிபொருள் விலையை குறைக்கும் தீர்மானம் நாட்டை மையப்படுத்தியே ஜனாதிபதியால் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் இறக்குமதி
மேலும், இலங்கைக்கான எரிபொருளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை முன்பதிவு (oder) செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்பட்ட எரிபொருள் கடந்த மாத அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |