சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை தடுத்து வைக்க தடை உத்தரவு
2022 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் இறக்குமதி செய்யப்பட்ட 07 மின்சார வாகனங்களை சுங்கக் காவலில் வைப்பதற்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (01) இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் தமது நிறுவனத்தினால் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட 07 மின்சார வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிரான மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றறிக்கை
மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றத்தில் குறிப்பிடுகையில்,
“தனது கட்சிக்காரர் வாகன இறக்குமதியை மரியாதைக்குரிய முறையில் கையாண்டார்.
ஒகஸ்ட் 31, 2022 அன்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, மனுதாரர் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 07 மின்சார வாகனங்கள் சட்டவிரோதமானது என்று கூறி ஆவணங்களை வெளியிட சுங்கத்துறை மறுத்துள்ளது.” என்றார்.