யாழில் சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்ய உத்தரவு
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான நிலை உருவாகுவதால் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அறிவித்தல்
இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை, காவல்துறை, விசேட அதிரடிப்படையினர் மூலம் இவ்வாறான தொழில்களை செய்பவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து தத்தமது கடற்றொழிலாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியால் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |