பாதாள உலக கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி அதிரடி கைது
மத்துகம, போபிட்டிய பகுதியில், ஐஸ் போதைப்பொருட்களுடன், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "கல் இப்பா" எனப்படும் கயான் பிரபாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சிறிது காலமாக துபாயில் வசித்து வந்ததாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1.1 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்
இந்த நிலையில், கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கையடக்க தொலைப்பேசியும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் வசம் இருந்த ஐஸ் போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் இருக்கு என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
