நடு வீதியில் பிறந்தது எங்கள் புத்தாண்டு - நுவரெலியாவில் போராட்டம்!
protest
Nuwara Eliya
srilankan economic crisis
By Kanna
அரச தலைவர் மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று நுவரெலியாவில் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“நடு வீதியில் பிறந்தது எங்கள் புத்தாண்டு” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் இளைஞர், யுவதிகள், பெரியோர், சிறியோர், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, ஆர்பாட்டக்காரர்கள் தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து, கோஷங்களையும் எழுப்பியிருந்ததோடு காவல்துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி