ஒரே நேரத்தில் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல் -ரஷ்ய படைக்கு பேரிழப்பு(காணொளி)
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் 17 ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்ய படைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கிரிமியாவின் Yevpatoriia பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய படையினரின் ஆயுத களஞ்சியசாலையை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத களஞ்சியசாலையை இலக்கு வைத்து
ரஷ்ய படையினரின் முகாம் அமைந்துள்ள பகுதி, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்ய படையினர் டசின் கணக்கில் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்துள்ளதோடு பெருமளவு உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி