முல்லைத்தீவில் வெள்ளத்தினால் அழிவடைந்த வயல் நிலங்கள்
வடக்கு கிழக்கு பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், பயிர்களுக்கு ஏற்படுகின்ற நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அவற்றிலிருந்து வயல்நிலங்களை காப்பாற்றிப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தினால் தற்போது அவை அழிவடைந்திருப்பதாகவும், இந்த அரசாங்கம் தமக்கான இழப்பீட்டினை தந்துதவினால் மேலும் தாங்கள் விவசாயத்தினை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.