கதிரவெளிக் கிராமத்தில் புதிய கல்விப் புரட்சி! நாளை உதயமாகிறது பகலவன் கல்வி நிலையம்
அறிவுச்சோலைக் கல்விக் கழகம் என்ற அமைப்பின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் கதிரவெளிக் கிராமத்தில் பகலவன் கல்வி நிலையம் திறப்பு விழா 03.06.2026 அன்று நடைபெறவுள்ளது.
இந்த மாலைநேர வகுப்பு அந்தக் கிராம அமைப்புகளையும் மக்களையும் இணைத்து அவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்க உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள அந்த மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதும் அந்த மக்களோடு இணைந்து அந்த கிராமத்தை வளர்த்தெடுப்பதே இதன் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கிராமத்துப் பிள்ளைகள் அறிவுஜீவிகளாக, புத்திஜீவிகளாக, நாட்டுப்பற்றாளராக மற்றும் கலைகளில் வல்லவர்களாக வளர வேண்டும்.
எதிர்காலத்தில் அவர்களே அந்தக் கிராமத்துத் தூண்களாக மாற வேண்டும் என்பதுடன், இதுவே இந்தக் கல்வி நிலையத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அழைப்பைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று அனைவரையும் அழைக்கின்றோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |