இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு
இந்தியாவுடனான (India) பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் தெஹ்ரானில் கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம்.
வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.
சமாதான முன்மொழிவு
சமாதான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் (இந்தியா) உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள் என்பதைக் காண்பிப்பார்கள்.
இந்தியாவுடனான மோதலில் இருந்து எங்கள் நாடு வெற்றி அடைந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
