இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் பாதுகாப்பு
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் இராணுவமும் துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வி தெரிவித்தார்.
போட்டியின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (13) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி
பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இந்தப் பாதுகாப்பு குறித்துத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

"இலங்கை அணியின் பாதுகாப்பிற்காக எங்கள் இராணுவமும் துணை இராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்" என்று மொஹ்சின் நக்வி குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை (11) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தின் முன் தற்கொலைக் குண்டுவெடிப்பு நடந்தது.
மிக மோசமான தாக்குதல்
12 பேர் கொல்லப்பட்டு 27 பேர் காயமடைந்த இந்தத் தாக்குதல், பல ஆண்டுகளில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல் கிரிக்கெட் மைதானம் மற்றும் இலங்கை அணி தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் நடந்தது.
இதேவேளை பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள், பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், சிறிலங்கா கிரிக்கெட் சபை அவர்களை போட்டியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |