ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்
Pakistan national cricket team
By Sumithiran
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எனினும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக வஹாப் தெரிவித்துள்ளார்.
38 வயதான இடது கை பந்துவீச்சாளரான வாஹப் ரியாஸ் கடைசியாக 2020 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார்.
237 விக்கெட்டுக்களை கைப்பற்றி

இவர் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 ரி20 போட்டிகளில் சுமார் 237 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி